குச்சிமிட்டாய் சாப்பிடுவேன்.
குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கலாம் என்று நினைத்தேன். அப்போது என் கண்ணில் பட்டது கடலை மிட்டாய். குழந்தைக்கும் நல்லது. நாமும் சாப்பிடலாம் என்று நினைத்து வாங்கிவந்தேன். அதில் பல மிட்டாய்களை யாழ் சாப்பிட்டாள். சேய்மொழியனும் சாப்பிடத்தொடங்கினான். சிறிது சிறிதாக்க் கடித்தவன் பிறகு மிட்டாயை முழுவதுமாக வாயில் போட்டுக் கடிக்கத் தொடங்கினான். நொரு நொரு என்று கடித்தவன் இனிப்பும் கடலையும் கலந்திருந்த அந்த மிட்டாயை முழுவதும் மாவுபோல் மென்று சாப்பிடத்தெரியாமல். என் கையில் வந்து துப்பினான். மிட்டாய் குறுணை குறுணையாக இருந்தது. அவன் துப்பியதன் காரணம் புரிந்தது. ஏன்டா சரியா ஒரு கடலை மிட்டாயைக் கடித்து சாப்பிடத்தெரியலை என்று கூறினேன். அதற்குச் சேய்மொழியன், ”எனக்கு குச்சிமிட்டாய் சாப்பிடத்தெரியும்” என்று கூறினான். நான் வியந்துபோனேன். அவனது அறிவை நினைந்து பெரிதும் மிகழ்ச்சியடைந்தேன். அதேவேளையில் பதிலிருந்த இலக்கண நுட்பங்களைச் சிந்தித்து மகிழ்ந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக