வெள்ளி, 28 நவம்பர், 2008

வேண்டாம் பெண்ணே


தொலைந்து விட்ட உறவுகள்
தொலையாத நினைவுகள்
தூரங்கள் மறைந்தாலும்
மனதின் துயரங்களோ
இன்னும் ஈரமாக
காயம் பட்ட இதயம்
கனமாய் வலிக்கிறது
வழிந்தோடும் கண்ணீரே
இதயத்தின் கனத்தை
இனியாவது கரைக்ககூடாதா
உள்ளத்தின் உளறல்கள்
ஊமை ஆயின
ஊருக்கு ஏற்றவாறு
ஒன்றிரண்டு சொற்களில்
ஓய்ந்து தொலைந்தன
வாக்கியங்கள்
பிணங்களை
நடமாடச் செய்யும்
நளினம் தெரியாத
இவ்வுலகிற்கு
எங்களது வாழ்கை
ரகசியத்தைப்
படித்துக் காட்டுங்கள்
நடந்து திரிந்தாலும்
நான் ஊனப்பட்டவன்
என்பதை
நான் அறிவேன்
அடியே
கல்மனதுக்காரி
காரியத்தில் கெட்டிக்காரி
கொட்டி விட்டதடி
எனது கோவில்
எங்களுக்குத் தோண்டப்பட்ட
குழியின் மண்
உங்கள் வாழ்கையில்
வந்து விழுந்துவிடலாம்
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தங்கள் செய்பவளே
வளரும் எங்களது நாட்டிற்கு
வாலிபமே முதுகெலும்பு
உனது
பொய்யான வார்த்தைகளிலும்
மெய்யால் உருவான வளைவுகளிலும்
ஒடிந்து விழுவது
வாலிபம் மட்டும்மல்ல
எங்கள் நாட்டின்
வாழ்க்கை வளங்களும் தான்
கரைந்து ஓடுவது
கண்ணீர் மட்டும்மல்
எங்கள் இமயத்தின்
சிகரமும் தான்
கால தேவனின் மாற்றத்தால்
அந்நிய நாட்டின் மோகத்தால்
குறைந்து விட்டது
உங்களின் ஆடை மட்டும்மல்ல
இளைய இதயங்களின்
ஆயுளும் தான்
நாங்கள்
ஆயுதம் ஏந்தி வந்தவர்களை
காகிதத்தால் கட்டுப்படுத்தியவர்கள்
அடிகளையும் உதைகளையும்
அகிம்சையால் தாங்கியவர்கள்
நாட்டை நாசமாக்கும்
உனது
நயவஞ்சக நாடகத்தை
நிறுத்திவிடு
இல்லையேல்
எங்கள் நாட்டை விட்டு ஓடிவிடு
விழுந்தாலும் விதைக்கப்படுவோம்
மடிந்தாலும் மறுபடியும் பிறப்போம்
எங்களை காயப்படுத்தவே
உன்னால் முடிவும்
கலங்கப் படுத்தமுடியும்மா ?

இயற்கை


பரந்து விரிந்த

பால் அண்டங்களும்

அகண்டோடிய ஆகாய வழிகளும்

மனிதனின் இதயமாக

இருண்டு இருப்பதுதான்

இயல்பா ? இல்லை .

இங்கே இரவென்றால்

இன்னொரு பகுதியில்

பகல் என்பதைப்

பார்த்ததுண்டா ?

அம்மாவாசை உனக்கென்றால்

அண்டத்தின் வேறெங்கோ

முழு நிலவு

பகல் போல் ஒளிர்வதை

உணர்ந்ததுண்டா ?

சுழன்று உருளும்

உனது உலகை

உருட்டிப் பார்

இரவில் பகலையும்

பகலில் இரவையும்

பார்த்து ரசிப்பாய்

இரவை துயரத்துடனும்

பகலைப் பரவசத்துடனும்

பாடும் புலவனுக்கு

தடை விதிப்போம்

இரவையும் பகலையும்

பட்டியலிடும்

ஏடுகளை திருத்தியமைபோம்

மறைக்கப் பட்ட

பகல்தான் இரவு

இருட்டடிப்புச் செய்யப்பட்ட

இரவுதான் பகல் என்பதை

பாருக்கு உணர்த்துவோம் .