வெள்ளி, 28 நவம்பர், 2025

கோபக்காரக் காற்று

 கோபக்காரக் காற்றின்

கோரப்பிடியில்
குலுங்கிச் சிரித்தன… குள்ள மரங்கள்...

வானளாவ வளர்ந்து
வயிறு புடைத்த வயோதிக மரங்கள்
போராட்டம் இல்லாமலே
பொடி… பொடியாய்… விழுந்தன…

உதிர்ந்த இலைகளில்
ஒழிந்த குச்சிகள்
மணற்பரப்பில்
சருகுகள் இல்லாத இலைகள்
சந்தங்கள் இல்லாமல் …

கிளைகள் தந்த நிழலில்
மண்ணில் மலர்ந்தன மலர்கள்...

வானத்தில் வேராய் விரிந்தன கிளைகள்
வேரில் முளைத்தன இலைகள்...

தளைகளின் மாற்றங்கள்
தலைகீழ் மாற்றங்களாய்…
புயலுக்கும் புரிதல் உண்டு
மண்ணில் வரவேண்டும்
மாற்றமென்று…

கருத்துகள் இல்லை: