வெள்ளி, 28 நவம்பர், 2008

இயற்கை


பரந்து விரிந்த

பால் அண்டங்களும்

அகண்டோடிய ஆகாய வழிகளும்

மனிதனின் இதயமாக

இருண்டு இருப்பதுதான்

இயல்பா ? இல்லை .

இங்கே இரவென்றால்

இன்னொரு பகுதியில்

பகல் என்பதைப்

பார்த்ததுண்டா ?

அம்மாவாசை உனக்கென்றால்

அண்டத்தின் வேறெங்கோ

முழு நிலவு

பகல் போல் ஒளிர்வதை

உணர்ந்ததுண்டா ?

சுழன்று உருளும்

உனது உலகை

உருட்டிப் பார்

இரவில் பகலையும்

பகலில் இரவையும்

பார்த்து ரசிப்பாய்

இரவை துயரத்துடனும்

பகலைப் பரவசத்துடனும்

பாடும் புலவனுக்கு

தடை விதிப்போம்

இரவையும் பகலையும்

பட்டியலிடும்

ஏடுகளை திருத்தியமைபோம்

மறைக்கப் பட்ட

பகல்தான் இரவு

இருட்டடிப்புச் செய்யப்பட்ட

இரவுதான் பகல் என்பதை

பாருக்கு உணர்த்துவோம் .

கருத்துகள் இல்லை: