அவமானம்
அரசுக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் ஒரு பயிலரங்கம் நடத்துவதாகக் கூறினார். அப்பயிலரங்கில் நான் பயிற்றுநராகப் பங்கேற்க வேண்டும் என்றுரைத்தார் எனக்கு கலந்துகொள்வதில் விருப்பம் ஏனென்றால் இதற்கு முன்பு நான் பணியாற்றிய கல்லூரி அது. எனவே ஒப்புக்கொண்டேன். பயிலரங்கிற்கு ஒருமாத காலங்கள் இருந்தன. பயிலரங்கிற்குக் கடுமையாகத் தயாரித்துக்கொண்டிருந்தேன். தயாரிப்புகள் முடியும் நிலைக்கு வந்தன. இதற்கிடையில் இன்னும் சில கருத்தரங்க வாய்ப்புகளும் பயிலரங்க வாய்ப்புகளும் வந்தன. எதையும் வேண்டாம் என்று கூறுவதற்கு மனமில்லை. நம்மையும் அழைக்கிறார்கள் எனவே முடிந்தவரையில் அவற்றை ஏற்றுக்கொண்டு சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்.
வாழ்வில் எனது எண்ணங்கள் எப்படியெல்லாம் சிதறிப் போயின என்பதை நான் நேரில் கண்டு வியப்படைவேன். இறைவனின் அன்பையும் அவர் ஏதோ செய்வதற்கு இப்படிச் செய்கிறார் என்றும் எண்ணிக்கொள்வேன். இது வழக்கம் தான். அவ்வாறே என் வாழ்வில் விழுந்த மிகப்பெரிய வலியாக இல்லை இடியாக எனது அன்னை என்னை விட்டுச் சென்றுவிட்டார்கள். பயிலரங்கிற்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தன. பயிலரங்கில் கலந்துகொள்ள இயலாது என்பதைத் தெரிவித்தேன். சிலர் ஏற்றுக்கொண்டனர். ஒரு சிலர் இல்லை ஒருவர் மட்டும் என்னை ஊக்கப்படுத்தினார். தங்களின் தாய் இருந்தால் தாங்கள் பங்கேற்பதையே விரும்புவார்கள் எனவே உங்களுக்கு ஏறார் போல தேதியில் மாற்றம் செய்து தருகிறேன். சற்று சிந்தித்து நாளை பதில் சொல்லுங்கள் என்றார். சரி என்று கூறிவிட்டேன் பிறகு சிந்தித்தேன். அவர்களின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. பங்கேற்பதாக வாக்குக் கொடுத்தேன். இப்பயிலரங்கில் பங்கேற்பதற்கு சற்று கூடுதலான நாட்கள் கிடைத்தன. ஆனால் ஐந்தே நாளில் இருந்த பயிலரங்கில் பங்கேற்பதற்கு மனமில்லை. எனினும் அதற்கான தயாரிப்புகள் நிறைவடைந்திருந்தன. வருவதற்கு இயலாது என்பதையும் அதன் காரணத்தையும் அந்த அரசு கலைக்கல்லூரிப் பேராசிரியரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் நான் கலந்துகொள்வதையே விரும்பினர். அவர்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து நானும் சரி என்று கூறிவிட்டேன்.
பயிலரங்கில் பேசுவதற்காகச் செல்லும் பொழுது தாயைச் சிறிதும் பிரியாதிருந்த என் தந்தை தற்பொழுது எனது தாயை இழந்து வாடிவரும் நிலையில் அவரையும் உடன் அழைத்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்றேன். இதற்கு இடையில் கட்டுரை மென்படிவமாக இருந்தே தவிர அதனை நான் பிரிண்ட் எடுக்கவில்லை. கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த நான் அந்தப் பேராசிரியருக்குத் தொலைபேசி வழிக் கேட்டேன். ஐயா நான் ஏற்கெனவே தங்களுக்கு அனுப்பியுள்ள கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளனவா? என்று இல்லை. ஏன் சார் அதெல்லாம் கேட்டுகுறீங்க என்றார். இல்லை ஐயா நான் இன்னும் பிரிண்ட் எடுக்கவில்லை என்று கூறினேன். என்னங்க சார் இப்படிச் சொல்லுறீங்க. சரிங்க சார் வாங்க வந்து வாங்கிக்கிடுங்க என்று கோபமாகப் பேசினார். அவரது கோபமான சொற்கள் என்னை பிரிண்ட் எடுக்கத் தூண்டின. எப்படியாவது பிரிண்ட் எடுத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக சில இடங்களுக்கு அலைய வேண்டியதாக இருந்தது. தந்தையுடன் அலைந்து அந்த வேளைகளை முடித்துக்கொண்டேன். எனக்கா நேரத்திற்கு இன்றும் பத்து நிமிடங்களே இருந்தன. கல்லூரிக்கு அருகில் சென்றுவிட்டேன். எனினும் எனது வருகையை நான் அவரிடம் தெரிவித்துவிட வேண்டும் என்று நினைத்து தொலைபேசி வழியில் தெரிவித்தேன். அதற்கும் அவர் கோபமாகப் பதில் உரைத்தார். மனம் மிகவும் வாட்டம் அடைந்தது. கல்லூரிக்குச் சென்ற என்னை அவர் வரவேற்க வருவதாக நினைத்தேன் அருகில் வந்தார். எனது தந்தையை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் அவர் என்னங்க சார் ஒரு கட்டுரையைக் கூட நீங்க பிரிண்ட் எடுக்க முடியாத என்றார். இல்லங்க சார் நான் எடுத்துவிட்டேன் என்று கூறினேன். பிறகு தந்தையை அறிமுகம் செய்து வைத்தேன். வாங்க என்று வரவேற்றார்.
நிகழ்வு தொடங்கியது. ஒரு பேராசிரியர் வரவேற்றார். நிகழ்வு சென்றுகொண்டிருந்தது. முடிவதற்கு அறை மணிநேரங்கள் இருக்கும் போதே அவர் முடிக்கச் சொன்னார். மாணவர்கள் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார். அப்பொழுது “எங்கள் கல்லூரியில் நாங்கள் பயிலரங்குகள் நடத்தும் பொழுது உங்களை இவ்வளவு சீக்கரம் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் இங்கு விரைவாக முடிக்கச் சொல்லியுள்ளார்கள்” என்ற தகவலை மாணவர்களுக்குச் சொல்லித் தொடர்ந்தேன். இதில் அவர் மிகுந்த கோபமடைந்துள்ளார். மாணவர்களுக்கு அருகில் கைமைக்கை எடுத்துக்கொண்டு சென்ற அவர் மாணவர்களைக் கேள்வி கேட்கத்தொடங்கினார். அவரது கோபம் பொருளற்ற கேள்விகளாக அமைந்தன. திடீரென்று மிகுந்த கோபத்துடன் பேசத் தொடகினார். கைமைக்கில் தான். எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கல்லூரியில் மாணவர்களை நீங்கள் சரியான நேரத்திற்கு அனுப்பலாம். அதற்கு உங்கள் கல்லூரி வாய்ப்பாக அமையும். இங்க அப்படிச் செய்ய முடியுமா? எதையும் ஒழுங்காகப் பேசுங்கள். அவை நாகரிகம் இல்லாமல் பேசாதீங்க. என்றுரைத்தார். அவரது கோபம் இன்னும் பல வார்த்தைகளை உதிர்த்தது. அவரது பேச்சு நீண்டது. எனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த தந்தை மிகுந்த சோகத்திற்குச் சென்றார். வீட்டில் எடுத்த செலுக்கெல்லாம் கோபப்படும் நான். பொருமையாக இருந்தேன். அக்கல்லூரியின் மாணவர்களை நான் அவமானப்படுத்திவிட்டாதாகக் கூறினார். அவரது கோப வார்த்தைகளை மனதில் போட்டுப் புதைத்துவிட்டு தலைப்புத் தொடர்பாக கேட்கப்பட்ட அர்த்தமற்ற கேள்விகளுக்கா விடைகளை மட்டும் கூறி. முடித்து விட்டு அந்தக் கல்லூரி மாணவர்களை நான் அவமானப் படுத்தவில்லை. என்பதையும் அந்தக் கல்லூரிக்கு வர விரும்பிய காரணத்தையும் கூறினேன் மாணவர்கள் மகிழந்தார்கள். எனினும் அவர்களது ஆசிரியரின் முன்பு அதனை அவர்கள் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. நன்றி கூறிய மாணவி பெரிதும் பாராட்டினார். அவரின் சொற்கள் எதுவும் எனது மனதிற்கு ஆறுதல் தரவில்லை. எனினும் பதிலுக்கு நன்றி கூறி விடைபெற்றேன். கீழே எனது மகளுடன் இருந்த என் மனைவி மிகவும் பெருமையாக எடுத்துக்கொண்டார். அவை நாகரிகம் இல்லை என்று கூறும் அவருக்கு அவை நாகரிகம் தெரியவில்லை. சரிவிடுங்கள் என்று ஆறுதல் கூறினார்கள். பரவாயில்லையப்பா எங்க நீ கோபமா வந்துவிடுவாயோ என்று நினைத்தேன். சரியாக முடித்துவிட்டு வந்தாய். இவனெல்லாம் ஆசிரியனா என்றார் அப்பா. சரிங்கப்பா விடுங்க என்று அமைதியாகக் கூறினேன்.
சிறிது நேரத்தில் என்னருகில் வந்த அந்தப் பேராசிரியர் சாரிசார் நான் தான் கொஞ்சம் கோபமாகப் பேசியிட்டேன். நீங்க பாட்டுக்கு நான் சீக்கிரமா அனுப்புவதாகக் கூறுகிறீர்கள். இங்கிருப்பவர்கள் நான் ஏதோ பணத்தைச் சுருட்டிக்கொண்டதாக நினைப்பாங்க என்றார். நான் பதில் எதுவும் சொல்லவில்லை. சரி விடுங்க என்று மட்டும் கூறிமுடித்தேன். எது எப்படியாக இருந்தாலும் அழைத்த என்னை அவர்கள் அவமானப்படுத்தியதாகவே எனக்குத் தோன்றியது. எனினும் நம்மிடம் இருக்கும் குறைகள் என்னவென்று யோசித்துப் பார்த்தேன். அந்த வார்த்தைகளைப் பேசியது தவறாக இருக்குமோ என நினைத்தேன். பிறகு பேசும் பொழுது பலமுறைகள் யோசிக்கத் தொடங்கினேன். அவர் நான் பேசவிருந்த அவைகளுக்கு மேலும் நாகரிகத்தைக் கொடுத்துவிட்டார். அவருக்கு நன்றி. நீங்களும் யோசித்துப் பேசுங்கப்பா.. அப்புறும் மனசு தாங்காம வருந்துவீங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக