வெட்டாத முடிகள்
நல்லா ஒட்ட வெட்டுங்க,
பள்ளிக்கூடந் திறக்குறதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு அடிக்கிற வெயிலுக்கு நல்லாஸ
ஒட்டடட வெட்டணும் என்றார் தாத்தா. கத்தரியின் வேகத்தை அந்த வார்த்தைகள் அதிகரித்தன.
ஆனால் முடிவெட்டியின் கைகள் அதனைச் செய்யவில்லை. இந்தப் பேரனை முடிவெட்டக் கூட்டிக்கிட்டு
வந்து அவனை அழைச்சிட்டுப் போவது இந்தத் தாத்தாவின் அளப்பெரிய கடமை. கந்துவட்டிக்காரனின்
குரல்வளைகள் வெடித்துவிடாமல் அடைப்பதற்குப் பெரிதும் உதவி செய்வது இந்தத் தாத்தா வழங்கும்
தொகைதான். அதனை நன்கு அறிந்த அவரின் மனம் கைகளைக் கட்டுப்படுத்தியது. இத்துடன் நிறுத்திக்கொணடால்
அடுத்தமாதத்துக்குள் முடிவளர்ந்துவிடும். ஏதோ வருமானம் கிடைக்கும். கைகள் தலையின் மேல்
தடுமாறுவதைக் கண்டார் தாத்தா நல்லான்ன் வெட்டுங்ககககஸ வார்த்தைகள் அழுத்தமாக நீண்டன. ஐயாஸ பையன்லஸ இவனுக்கு
இதுக்குமேல வெட்டினான்ன்ஸ நல்லாவான்ஸ இருக்கும்ஸ. அசிங்கமாவுல போகும். சரி சரிதான்
பார்த்து வெட்டுங்க என்றார் தாத்தாஸ
கழுத்தை இறுக்கமாகக்
கட்டிய துணிக்குள் வியர்வை நாற்ற நெடிக்குள் உறைந்துகொண்டிருந்த சிறுவனின் மூக்குகள்
குனிந்துவிடாதபடி நல்ல நிமிர்ந்து உட்கார் என்று மூக்கை வானத்தை நோக்கும் வாழைக்குருத்து
போல நேரே நிறுத்தினார். தூவல் தூவலாய்ச் சிந்திய முடிகள் முகத்திலும் முதுகிலும் விழுவதைக்
கவனித்து அதில் ஒரு கணிப்புச் செய்து மனதிற்குள் யாரையோ நினைத்து உட்கார்ந்திருந்தான்
சிறுவன்.
சட்டைப் பாக்கெட்டில்
மடித்து வைக்கப்பட்ட பணத்தை தலையைக் குனிந்தவாறே கணிக்கிட்டார் தாத்தா. முடிவெட்டியின்
கத்திரிகள் வானத்தில் சத்தமிட்டமிட்டன. முடிகள் கத்திரியில் சிக்கமால் சிரித்துக்கொண்டன.
வெட்டாமல் வெட்டும் விளையாட்டின் இடையில் குறைப்பார்வையைத் தாத்தாவின் பாக்கெட்டில்
செலுத்தினார் முடிவெட்டி. அவரின் கண்களில் இன்று வாங்கவேண்டிய அரிசிக்கு வேண்டிய வழிகள்
அதற்குள் தெரியவில்லை. எதோ கத்தரிக்காயும் தக்காளியும் தென்பட்டன. அப்படியென்றால் ரெண்டுமாத
விடுமுறையில் வந்திருக்கும் தனது பேரக்குழந்தைகளுக்கு என்ன செய்வது. கை தவறிய கத்திரிகள்
முடிவெட்டியின் வயிற்றுக்குள் வெட்டியதாய் உணர்ந்தார் முடிவெட்டி.
அறை மணிநேரப் போராட்டம்
முடிகள் வெட்டுப்படாமல் கத்திரிகள் வெட்டின. அடுத்த மாதத்திற்கான வரும்படியை விதைகளாய்
மண்டையில் விட்டு வைத்தார். சரி சரி இந்தான்ஸ என்று நாற்பது ரூபாயை நீட்டிய தாத்தா இன்னும் கொஞ்சம் ஒட்ட வெட்டியிருக்கலாம்ல
என்றார்ஸ இல்லங்கய்ய பையன்லஸ இவனுக்குஸ என்று பழையபடியே வாய்ப்பாட்டுப் பாடினார் அதுதான்
அவரின் வாழ்க்கைப்பாடு.
மூன்று மாதங்களுக்கு
ஒருமுறை மட்டும் இந்தக் கடைக்கு வந்து செல்லும் வயோதீகச் சீவன் ஒன்று வாசலில் நெடுநேரம்
நிற்பதைக் கவனித்த முடிவெட்டி அன்போடு அழைத்து ஆசனத்தில் அமர்த்தினார். வறுமைகள் பேசுவதால்
ஏதும் பேசாமலே உட்கார்ந்தார். தள்ளு வண்டி இழுத்துப் பிழைக்கும் இந்த வயோதீகச் சீவனுக்கு
முடிவெட்டுவதில் கத்தரிகள் கச்சிதமாய்ச் செயல்பட்டன. அழுத்தந் திருந்தமாக வெட்டிய பின்பு
அவர் தந்த பணத்தில் பாதியை எடுத்துக்கொண்டு மீதியை தந்த போது வயோதீக மனம் கொடுத்துவிடு
எனச் சொல்வதைக் கேட்காமலே வறுமையில் வலுவிழந்த கைகள் வாங்கிக்கொண்டு அதற்கான வணக்கத்தையும்
செலுத்தின.
மின்விசிறியை நிறுத்திவிட்டு
வெளியில் வந்து உட்கார்ந்த முடிவெட்டியின் கண்கள் கண்ணாடிக் கதவுக்குள் முடிவெட்டிக்கொள்ளும்
வாலிபர்களை நோக்கமிட்டன. சடை சடையான முடிகளுடன் உட்கார்ந்து அவ்வாறே எழுந்து வந்தனர்.
நூறின் மடங்கில் நூறு ரூபாய்த் தாள்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டன. விரல்கள் சீப்புகளின்
வேலைகளைச் செய்தன. அங்கே கத்தரிகளுக்கான உரிமை மறுக்கப்பட்டன. மேசைகளில் வரிசையாக அடுக்கி
வைக்கபட்ட சீப்புகள் ஒவ்வொருநாளும் துடைத்து வைக்கப்பட்டன. எப்பொழுது எடுத்து சீவப்
போகிறார் என்று ஏங்கிய சீப்புகளுக்கு எப்போதும் நீங்கள் இப்படித்தான் என்றுரைத்தன,
அவற்றைப் பார்த்துப் பழகிய கண்ணாடிகள்.
காலையில் கடைவிரித்த
கருவாட்டுக்காரியின் வயிறுகள் காய்ந்துகொண்டிருந்தன. பழைய சோற்றைப் பாழுங்கிழவனுக்கு
வைத்துவிட்டு வயிற்றைக் கழுவிக்கொள்ள வழியின்றி கருவாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு
வாசலில் விற்கும் இட்லிகள் இன்னும் சற்று நேரத்தில் தீர்ந்தவிடுமே என்ற ஏக்கம் தொற்றிக்கொண்டன.
பசித்த வயிறுகள் பா¨~களைப் பரிமாறிக்கொண்டன. முடிவெட்டி இருபது ரூபாயில் கருவாட்டை
வாங்கிக்கொள்ள கருவாட்டுக்காரியின் வயிற்றுக்குள் நான்கு இட்லிகள் “இன்றைக்கு நீங்கள்
மட்டுந்தான் என் வயிற்றுக்குப் பொறுப்பு” என்ற விதிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டன.
வெள்ளிக் கிழமையும் அதுவுமா
இந்தக் கிழம் கருவாட்டை வாங்கி வந்திருக்கேஸ என்னத்தச் சொல்லஸ என்று அழுத்துக்கொண்டாள்
கிழவி. இன்று வெள்ளிக் கிழமைதான் இறைவனுக்கு அங்கே இட்லிகளைப் படைத்துவிட்டேன். அதனால்
ஒன்றும் பயமில்லை. நீ கருவாட்டைச் சமையல் செய் என்று முடிவெட்டி கூறிய வார்த்தைகளுக்குள்
ஏதோ வெட்டப்படாமல் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கிழவி உணராமலில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக