வியாழன், 21 நவம்பர், 2019

மழைக்கும்
என் மனைவியைப் பிடிததுள்ளது
அவள் காயவைத்த துணியை நனைப்தும்
ஈரமான அவள் மனதைக் காயவைப்பதும்...
மழைக்கும்
என் மனைவியைப் பிடித்துள்ளது.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

மரம்

உதிரும் இலைகூட
உங்கள்
உணர்வைத்தட்டவில்லையா?

காய்ந்த சருகும்
கானம் இசைப்பது
உங்கள்
காதில் விழவில்;லையா?

இங்கு
பாம்புக்கும் இடமுண்டு
பச்சிளங் குருவிக்கும் இடமுண்டு
உச்சி சுடும் வெயிலிலும்
உள்ளம் குளிரும் சுகமுண்டு

பச்சி பறவைகளின்
பாரத கண்டங்களாவோம்
இதை
மெச்சி மதிக்காத மனிதர்களுக்கு
விறகுத் துண்டுகளாவோம்

கல்லால் எறிந்தாலும்
கனியாய் விழுவோம்
மண்ணில் புதைத்தாலும்
மீண்டும்
மரமாய் முளைப்போம்

பல நூறு ஆண்டுகளாய்
பக்குவமாய் வளர்ந்த போதும்
சில நூறு நொடிகளில்
சிதைக்கிறதே உங்கள் கரம்

மரம் தந்த மகத்துவத்தை
மறந்துவிட்ட மனிதர்களே!
மரண தண்டனை தந்தவர்களே!
உங்களை
மன்னிப்பது எங்கள் குணம்
ஆனால்
மன்னிக்காது உங்கள் இனம்


இதயமற்ற மனிதர்களே!
உங்களின்
ஆடாத ஆட்டத்தால்
அழிவது
நாங்கள் மட்டுமல்ல
ஆண்டவனும் தந்திடாத
உங்களின் ஆயுளும் தான்

தரையில் ஊற்றிய தண்ணீரையும்
தலையில் தருகின்றோம்
மழையின்றி மாண்டு வரும் மனிதர்களே!
மழை தரும் எங்களையும்
மாண்டுவிடச் செய்வது ஏனோ?

வரலாறு படிக்கட்டும்
இனிவரும் வரலாறு படிக்கட்டும்

“ மரம் என்ற ஒன்றுண்டு
மழை தரும் மகத்துவம் அதற்குண்டு
ஆறடியிலும் அது உண்டு
அறுபதடியிலும் வளர்வதுண்டு
கானம் இசைக்கும் இலையுண்டு
காயும் கனியும் தருவதுண்டு
தென்றல் தரும் சுகமுண்டு
அதில் தெய்வங்கூட உறைவதுண்டு
மரம் எனும் தெய்வத்தை
வேரோடு அழித்திட்ட
இரக்கமற்ற மனிதரும் அங்குண்டு”

என்று
வரலாறு படிக்கட்டும்
இனிவரும் வரலாறு படிக்கட்டும்

மழை



கருவாச்சி பெற்றெடுத்த
காவியங்கள்

சிறு தூரல்களும்
சின்னச் சினுங்கள்களும்
எந்தன் பிறப்பின் அடையாளங்கள்

வான்புகழும் வள்ளுவன்
எங்களை வணங்கினான்
எங்கள் முதல் வணக்கம்
அவனுக்கு

மேட்டுக்குடியும்
பள்ளப் பகுதியும்
பார்ப்பதில்லை
சாக்கடையானாலும்
சந்தனமானாலும்
சலனப்படுவதில்லை
எல்லோர் பொருட்டும் பெய்கின்றோம்
எதற்காக
நல்லோர் பொருட்டு என்றீர்கள்?

கருப்பாக இருந்தாலும்
சிவப்பாக இருந்தாலும்
கட்டித்தழுவிக் காதலிப்போம்
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று காட்டும்
பழக்கம் எங்களிடம் இல்லை
கருப்பில் கலந்தால் கருப்பாவோம்
சிவப்பெனில் சிவந்து நிற்போம்
விட்டுக்கொடுத்து பெற்றுக் கொள்வதில்
எங்களைவிட நீங்களா
உயர்ந்தவர்கள்?

வராவிட்டால் துடிக்கின்றீர்கள்
வந்துவிட்டாலோ குடைபிடிக்கின்றீர்கள்?
ஏங்கிய உங்களுக்காக
இறங்கி வந்த எங்களைக்
கதவடைத்து வரவேற்பதுதான்
உங்கள் பண்பாடா?

புல்லும் பூவும்
மண்ணும் மரமும்
காயும் கனியும்
எங்கள் தாலாட்டில்
தலைகவிழ்ந்து நிற்பதைப்
பார்த்ததில்லையா?

எங்கள் வரவுக்காக
வாசல் வந்த தவளைகள்
எங்கள் உறவுக்காக
ஏங்கியிருந்த குவளைகள்
இவைகளை விட்டுவிட்டு
சின்னத் தூரலுக்கே
ஜன்னல் அடைக்கும்
ஜனங்களே
உங்களையா விரும்புவோம்?

கூரை வீட்டில் ஒழிந்துகொண்ட
எங்கள் கூட்டாளியைக்
கூரை பிரித்துக் கண்பது
எங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு

சிறிதாகத்தான் தொடங்குவோம்
சீரினால்
இந்த உலகையே
எங்களுக்குள் விழுங்குவோம்

பள்ளம் நோக்கிப் பாய்வதே
எங்கள் கொள்கை
கட்டுக்காகவும் கட்சிக்காகவும்
மாறும் இழிவு
எங்களிடம் இல்லை

எங்களுக்குள் அடித்துக் கொண்டாலும்
பட்டுத்தெறித்துக் கொண்டாலும்
பாசத்துடன் கூடியே இருப்போம்
நீர் அடித்து நீர் விலகுவதில்லை
எனும் வாக்கை
நீர் அறிந்ததில்லையா?

பெய்யும் பொழுதில் மழை
அடித்துச் செல்லுகையில் ஆறு
விழுந்தால் அருவி
ஓரிடத்தில் குவிந்தால் குளம்
இவை எல்லாம் கலந்தால்
கடல்
இது எங்கள் ஒற்றுமைக்கான
அடையாளங்கள்

எங்கள் கூட்டணிக்குக்
கிடைத்த வெற்றி
எழுபத்தோர் சதவீதம்
விட்டுவைத்துள்ள விழுக்காட்டை
விழுங்குவதற்கு
வினாடிகள் போதும்
வீணாக விளையாடதீர்கள்

கடவுளைக் கற்பித்த கயவர்களே
உங்களால்தான்
எங்கள்
காவிரியும் கங்கையும்
கலங்கப்பட்டது
கலங்கப்படுத்திய உங்களுக்கு
புனிதமா
என்ன நியாயம் இது?

மாதம்
மும்மாரிதான் பொழிந்தோம்
நீங்களோ
எங்கள் மீது
வசைமாறிப் பொழிந்தீர்கள்
நச்சுப்புகையை
எங்கள்
தொப்புள் கொடிச் செந்தங்களை
தூரோடு சாய்த்துத்
தரையோடு போடடீர்கள்
இன்று
மாறிமாறி முயன்றாலும்
மாரியாகப் பொழிய முடியாது
மாற்றிவிட்டீர்கள்

விண்ணையும் மண்ணையும்
ஊசி கொண்டு தைக்கும்
வித்தை தெரியுமா உங்களுக்கு?
காற்றோடு கலந்து பேசும்
கலைகள் தெரியுமா உங்களுக்கு?

உள்ளங்கையும் நனையாத
குளியல் எதற்கு
உள்ளமும் குளிரும்படி
எங்களுடன் உறவாடுங்கள்
வந்து நனைந்து பாருங்கள்
அழுக்கு மட்டுமல்ல
அங்கே குடிகொண்ட
அகந்தையும் அகன்றோடும்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

மழை

கருவாச்சி

பெற்றெடுத்தகாவியங்கள்


சிறு தூரல்கலும்சிமித்து

சினுங்கள்களும்எந்தன் பிறப்பின் அடையாளங்கள்
வான்புகழும் வள்ளுவன் எங்களை வணங்கினான்எங்கள் முதல் வணக்கம்அவனுக்கு
மேட்டுக்குடியும்பள்ளப் பகுதியும்பார்ப்பதில்லைசாக்கடையானாலும்சந்தனமானாலும்சலனப்படுவதில்லைஎல்லோர் பொருட்டும் பெய்கின்றோம்எதற்காகநல்லோர் பொருட்டு என்றீர்கள்?
கருப்பாக இருந்தாலும்சிவப்பாக இருந்தாலும்கட்டித்தழுவிக் காதலிப்போம்உள்ளொன்று வைத்துப்புறமொன்று காட்டும் பழக்கம் எங்களிடம் இல்லைகருப்பில் கலந்தால் கருப்பாவோம்சிவப்பெனில் சிவந்து நிற்போம்விட்டுக்கொடுத்து பெற்றுக் கொள்வதில்எங்களைவிட நீங்களா உயர்ந்தவர்கள்?
வராவிட்டால் துடிக்கின்றீர்கள்வந்துவிட்டாலோ குடைபிடிக்கின்றீர்கள்?ஏங்கிய உங்களுக்காகஇறங்கி வந்த எங்களைக்கதவடைத்து வரவேற்பதுதான்உங்கள் பண்பாடா?


புல்லும் ப+வும்மண்ணும் மரமும்காயும் கனியும்எங்கள் தாலாட்டில்தலைகவிழ்ந்து நிற்பதைப்பார்த்ததில்லையா?
எங்கள் வரவுக்காக வாசல் வந்த தவளைகள்எங்கள் உறவுக்காகஏங்கியிருந்த குவளைகள்இவைகளை விட்டுவிட்டுசின்னத் தூரலுக்கேஜன்னல் அடைக்கும் ஜனங்களேஉங்களையா விரும்புவோம்?
கூரை வீட்டில் ஒழிந்துகொண்டஎங்கள் கூட்டாளியைக்கூரை பரித்துக் கண்டுபிடிப்பதுஎங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு
சிறிதாகத்தான் தொடங்குவோம்சீரினால் இந்த உலகையே எங்களுக்குள் விழுங்குவோம்
பள்ளம் நோக்கிப் பாய்வதேஎங்கள் கொள்கைகட்டுக்காகவும் கட்சிக்காகவும்மாறும் இழிவு எங்களிடம் இல்லை
எங்களுக்குள் அடித்துக் கொண்டாலும்பட்டுத்தெறித்துக் கொண்டாலும்பாசத்துடன் கூடியே இருப்போம்நீர் அடித்து நீர் விலகுவதில்லைஎனும் வாக்கைநீர் அறிந்ததில்லையா?
பெய்யும் பொழுதில் மழைஅடித்துச் செல்லுகையில் ஆறுவிழுந்தால் அருவிஓரிடத்தில் குவிந்தால் குளம்இவை எல்லாம் கலந்தால்கடல் இது எங்கள் ஒற்றுமைக்கான அடையாளங்கள்



எங்கள் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றிஎழுபத்தோர் சதவீதம்விட்டுவைத்துள்ள விழுக்காட்டைவிழுங்குவதற்குவினாடிகள் போதும்வீணாக விளையாடதீர்கள்
கடவுளைக் கற்பித்த கயவர்களேஉங்களால்தான் எங்கள் காவிரியும் கங்கையும்கலங்கப்பட்டதுகலங்கப்படுத்திய உங்களுக்குபுனிதமாஎன்ன நியாயம் இது?
மாதம் மும்மாரிதான் பொழிந்தோம்நீங்களோஎங்கள் மீதுவசைமாறிப் பொழிந்தீர்கள்நச்சுப்புகையைஎங்கள் தொப்புள் கொடிச் செந்தங்களைதூரோடு சாய்த்துத் தரையோடு போடடீர்கள்இன்று மாறிமாறி முயன்றாலும் மாரியாகப் பொழிய முடியாதுமாற்றிவிட்டீர்கள்
விண்ணையும் மண்ணையும்ஊசி கொண்டு தைக்கும்வித்தை தெரியுமா உங்களுக்கு?காற்றோடு கலந்து பேசும்கலைகள் தெரியுமா உங்களுக்கு?
உள்ளங்கையும் நனையாத குளியல் எதற்குஉள்ளமும் குளிரும்படிஎங்களுடன் உறவாடுங்கள்வந்து நனைந்து பாருங்கள்அழுக்கு மட்டுமல்லஅங்கே குடிகொண்ட அகந்தையும் அகன்றோடும்


வியாழன், 4 டிசம்பர், 2008

இன்றைய கடன்கள்


பெண்ணியப் பேச்சில் மண்ணில் வீழாதிருத்தல்

மகளிர்க்குக் கடனே

அன்னைத் திருநாட்டில் அந்நியனாய் வாழாதிருத்தல்

ஆடவர்க்குக் கடனே

கறை படியாத கல்வியைக் காலத்தே வழங்குதல்

கற்பிப்போன் கடனே

நன்னடை நடந்து நாட்டையும் நடக்கச் செய்தல்

நாடாள்வான் கடனே

காலக் கனவை விட்டு கடமை நினைவை செயலாற்றுதல்

காளையர் கடனே

வெள்ளி, 28 நவம்பர், 2008

வேண்டாம் பெண்ணே


தொலைந்து விட்ட உறவுகள்
தொலையாத நினைவுகள்
தூரங்கள் மறைந்தாலும்
மனதின் துயரங்களோ
இன்னும் ஈரமாக
காயம் பட்ட இதயம்
கனமாய் வலிக்கிறது
வழிந்தோடும் கண்ணீரே
இதயத்தின் கனத்தை
இனியாவது கரைக்ககூடாதா
உள்ளத்தின் உளறல்கள்
ஊமை ஆயின
ஊருக்கு ஏற்றவாறு
ஒன்றிரண்டு சொற்களில்
ஓய்ந்து தொலைந்தன
வாக்கியங்கள்
பிணங்களை
நடமாடச் செய்யும்
நளினம் தெரியாத
இவ்வுலகிற்கு
எங்களது வாழ்கை
ரகசியத்தைப்
படித்துக் காட்டுங்கள்
நடந்து திரிந்தாலும்
நான் ஊனப்பட்டவன்
என்பதை
நான் அறிவேன்
அடியே
கல்மனதுக்காரி
காரியத்தில் கெட்டிக்காரி
கொட்டி விட்டதடி
எனது கோவில்
எங்களுக்குத் தோண்டப்பட்ட
குழியின் மண்
உங்கள் வாழ்கையில்
வந்து விழுந்துவிடலாம்
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தங்கள் செய்பவளே
வளரும் எங்களது நாட்டிற்கு
வாலிபமே முதுகெலும்பு
உனது
பொய்யான வார்த்தைகளிலும்
மெய்யால் உருவான வளைவுகளிலும்
ஒடிந்து விழுவது
வாலிபம் மட்டும்மல்ல
எங்கள் நாட்டின்
வாழ்க்கை வளங்களும் தான்
கரைந்து ஓடுவது
கண்ணீர் மட்டும்மல்
எங்கள் இமயத்தின்
சிகரமும் தான்
கால தேவனின் மாற்றத்தால்
அந்நிய நாட்டின் மோகத்தால்
குறைந்து விட்டது
உங்களின் ஆடை மட்டும்மல்ல
இளைய இதயங்களின்
ஆயுளும் தான்
நாங்கள்
ஆயுதம் ஏந்தி வந்தவர்களை
காகிதத்தால் கட்டுப்படுத்தியவர்கள்
அடிகளையும் உதைகளையும்
அகிம்சையால் தாங்கியவர்கள்
நாட்டை நாசமாக்கும்
உனது
நயவஞ்சக நாடகத்தை
நிறுத்திவிடு
இல்லையேல்
எங்கள் நாட்டை விட்டு ஓடிவிடு
விழுந்தாலும் விதைக்கப்படுவோம்
மடிந்தாலும் மறுபடியும் பிறப்போம்
எங்களை காயப்படுத்தவே
உன்னால் முடிவும்
கலங்கப் படுத்தமுடியும்மா ?

இயற்கை


பரந்து விரிந்த

பால் அண்டங்களும்

அகண்டோடிய ஆகாய வழிகளும்

மனிதனின் இதயமாக

இருண்டு இருப்பதுதான்

இயல்பா ? இல்லை .

இங்கே இரவென்றால்

இன்னொரு பகுதியில்

பகல் என்பதைப்

பார்த்ததுண்டா ?

அம்மாவாசை உனக்கென்றால்

அண்டத்தின் வேறெங்கோ

முழு நிலவு

பகல் போல் ஒளிர்வதை

உணர்ந்ததுண்டா ?

சுழன்று உருளும்

உனது உலகை

உருட்டிப் பார்

இரவில் பகலையும்

பகலில் இரவையும்

பார்த்து ரசிப்பாய்

இரவை துயரத்துடனும்

பகலைப் பரவசத்துடனும்

பாடும் புலவனுக்கு

தடை விதிப்போம்

இரவையும் பகலையும்

பட்டியலிடும்

ஏடுகளை திருத்தியமைபோம்

மறைக்கப் பட்ட

பகல்தான் இரவு

இருட்டடிப்புச் செய்யப்பட்ட

இரவுதான் பகல் என்பதை

பாருக்கு உணர்த்துவோம் .